\
அதிமுகவில் மாற்றம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம் !

அதிமுகவில் மாற்றம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம் !

அதிமுகவில் மாற்றம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம் !
Published on

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கொள்கை பரப்புத் துணை செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை விந்தியாவுக்கும் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். திருப்பத்தூர் - கே.சி.வீரமணி விழுப்புரம் - சி.வி. சண்முகம் காஞ்சிபுரம் - சோமசுந்தரம் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாகை - ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு - நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னதாக அதிமுகவில் 56 மாவட்டங்களில் இருந்தன. இப்போது 67 மவட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com