கழுத்தில் அதிமுக துண்டு... முத்து மாரியம்மன் கோயிலில் விழுந்து வழிபாடு செய்த சசிகலா

கழுத்தில் அதிமுக துண்டு... முத்து மாரியம்மன் கோயிலில் விழுந்து வழிபாடு செய்த சசிகலா

கழுத்தில் அதிமுக துண்டு... முத்து மாரியம்மன் கோயிலில் விழுந்து வழிபாடு செய்த சசிகலா
Published on

தமிழகம் திரும்பிய சசிகலா முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். சசிகலா அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தடையை மீறி பயன்படுத்திய கொடி அந்தக் காரில் இருந்து அகற்றப்பட்டது.

இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறினார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கிறது. தமிழகத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து சசிகலா மாறிய மற்றொரு காரில் அதிமுக கொடி பறந்து வருவதால் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அளித்தனர்.

இந்நிலையில் தற்போது சசிகலா கழுத்தில் அதிமுகவின் கட்சி துண்டுடன் ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் விழுந்து வழிபாடு செய்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com