\
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பெயரில்லாமல் வெளியான அதிமுக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பு! ஆனால்..?

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பெயரில்லாமல் வெளியான அதிமுக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பு! ஆனால்..?

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பெயரில்லாமல் வெளியான அதிமுக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பு! ஆனால்..?
Published on

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில்லாமல் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது வகித்து வரும் பொறுப்பை குறிப்பிட்டு அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை 27ம் தேதி அதிமுக அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வழக்கமாக அதிமுக கட்சி சார்ந்த அறிவிப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயருடன் வெளியாகி வந்தன. ஆனால் இன்று வெளியான இந்த தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயரில்லாமல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதே சமயத்தில் கழக தலைமை நிலையச் செயலாளர் என்ற பொறுப்பு முதன்முறையாக அதிமுக அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. தற்போது அப்பதவியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com