'கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணத்தை உயர்த்த வெக்கமில்லை' - செல்லூர் ராஜூ

'கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணத்தை உயர்த்த வெக்கமில்லை' - செல்லூர் ராஜூ
'கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணத்தை உயர்த்த வெக்கமில்லை' - செல்லூர் ராஜூ

ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒளிப்பதாக கூறிய திமுக ஆட்சியில் தமிழகம் தற்போது போதை மாநிலமாக மாறி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி T.M. கோர்ட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ," ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார், ஆனால் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது, அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த மு.க. ஸ்டாலின் ஜோசியத்தை பார்த்து அதிமுக ஆட்சி 3 மாத காலங்களில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். திமுக ஆட்சியில் விடியல் தருகிறேன், என்று கூறி இருட்டை கொடுத்துவிட்டார் நமக்கு விடியவே இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் " சட்டை கிழிந்து போனால் ஒட்டு போட்டு தைப்பார்கள் அது போல தான் மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது சாலை அமைக்காமல் சாலையின் மேல் Batch Road போட்டார்கள், தமிழகத்திற்கே நிதி கொடுக்கும் நிதிமையமைச்சர் மதுரைக்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை. திமுக திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள், கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணம் உயர்த்த வெக்கமில்லை, மக்களுக்கு எதுமே செய்யாமல் ஆட்சி நடத்தும் முதல்வர் நன்கு போஸ் கொடுக்கிறார். பெண்களுக்கு உரிமை தொகை இதுவரை வழங்கவில்லை, முதியோர் உதவித்தொகை திட்டம் முடக்கப்பட்டு வருகிறது " என செல்லூர் ராஜூ கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர் " குங்குமம் வைத்தவகள் விபச்சாரியின் பிள்ளைகள் என ஆ.ராசா கூறினார், ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு இன்று ஆண்டிமுத்து ராசா இன்று ஆ. ராசாவாக மாறிவிட்டார், ஜெயலலிதா மாதிரி ஆட்சி செய்வதாக சொன்னால் போதாதது. திமுக கட்சியில் நடைபெறும் அட்டூழியத்தை கண்டிக்க வேண்டும், கண்டிக்கும் தலைமை வேண்டும். இந்துக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களை இழிவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் . திமுக ஆட்சியில் பெண்களுக்கு, காவலர்களுக்கு அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது எல்லோரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்" என்றார் செல்லூர் ராஜூ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com