இபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கு விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ள சூழலில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
இபிஎஸ்
இபிஎஸ்கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பூத்கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி அளித்திருப்பது குறித்தும் அதிமுக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com