
பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல் போக்கு கடந்த சில தினங்களாக வலுவான நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பாஜக இல்லை எனவும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, சமீபத்தில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருந்த அதிமுக தலைவர்கள் குழு, இபிஎஸ்ஸையும் சந்தித்து பேசி இருந்தது.
இந்நிலையில், சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செப். 25) நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியன. அந்தவகையில், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும் எடப்பாடியார் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.