\
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை
Published on

தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்துள்ளனர். அந்தக் குழு, தமிழக அரசியல் கட்சிகள், தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “வாக்கு இயந்திரம் இருக்கும் இடத்தில் மின்விளக்கு பொருத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்களிக்கும் முறையை வரவேற்கிறோம். ஏப்ரல் 4வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com