\
அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்
Published on: 

அரசு நிகழ்ச்சிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்பதும், அவருக்கு அமைச்சருக்கு நிகரான மரியாதை அளிக்கப்படுவதும் உற்றுநோக்க வைக்கிறது. அதிலும் அமைச்சர் மா.சுப்ரமணியன் வார்த்தைக்கு வார்த்தை துணை முதல்வர் என குறிப்பிட்டு பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு பதவியேற்றபோது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருடன் ஒரே மேசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை காண முடிந்தது. இது அரசியல் நாகரீகம் என அப்போது பேசப்பட்டது. அந்த அரசியல் நாகரீகத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

தேனியில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவறாமல் அவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற கொரோனா குறித்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com