அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: போட்டியின்றி தேர்வாக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: போட்டியின்றி தேர்வாக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்:  போட்டியின்றி தேர்வாக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவு பெற்றது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், இறுதி நாளான இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல், இருவருக்கும் ஆதரவாக நிர்வாகிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதயடுத்து, வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பொன்னையன், வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com