கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியா? பொதுச் செயலாளர் முடிவு செய்வார் - கே.பி.முனுசாமி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்வார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
KP MUNUSAMY
KP MUNUSAMYPT Desk

கர்நாடக மாநில அதிமுக துணைச் செயலாளர் ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் இன்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி.முனுசாமியை சந்தித்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது அல்லது கூட்டணி கட்சிக்கு பணியாற்றுவது குறித்தும் கேபி.முனுசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதற்கு பதிலளித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி.முனுசாமி, கர்நாடக மாநில தேர்தலில் அதிமுக போட்டியிடுவதா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதா போன்ற எந்த நிலைப்பாடும் இன்னும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தங்களுடைய நிலைப்பாட்டை பொதுச் செயலாளரை சந்தித்து தெரிவிக்குமாறு கேபி.முனுசாமி கர்நாடகா மாநில நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை அடுத்து கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளரை சந்தித்து கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com