தமிழ்நாடு
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ள முன்களப் பணியாளர்களான மருத்துவர் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொரோனாவை எதிர்கொண்டு உயிர் காக்கும் பணியில் அஞ்சாது ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற இழப்புகள் வருங்காலங்களில் நிகழாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

