aiadmk chief eps election first manifesto announced
எடப்பாடி பழனிசாமிpt web

”மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை “ - தேர்தல் வாக்குறுதி தந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
Published on

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

aiadmk chief eps election first manifesto announced
எடப்பாடி பழனிசாமிஎக்ஸ் தளம்

'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும். மகளிருக்கு ரூ.25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

aiadmk chief eps election first manifesto announced
தமிழ்நாட்டில் NDAக்கு தலைமை தாங்கும் அதிமுக; முழு அதிகாரமும் பழனிசாமிக்கே! 16 தீர்மானங்கள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com