"கோயிலை கட்டியதால் அனைவரும் பாஜகவிற்கு செல்வார்கள் என்று அர்த்தமில்லை" - இபிஎஸ் விமர்சனம்

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் அதிகம் கோவில்கள் கட்டி குடமுழுக்கு செய்துள்ளோம். கோயில் கட்டியதால் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றால், அனைவரும் கோயில் காட்டும் வேலைக்கு சென்று விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி PT WEB

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முடிவுற்ற நிலையில் அந்த திட்டங்களை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, பேசிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

திமுக இளைஞரணி மாநாடு குறித்து..

"சமீபத்தில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாடு அவர்கள், எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. 5 லட்சம் பேர் வரை அந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒன்றரை இலட்சத்திற்கும் குறைவான தொண்டர்கள் மட்டுமே மாநாட்டிற்கு வந்தனர். அதனால் திடலில் போடப்பட்டிருந்த பெரும்பாலான இருக்கைகள் கலியாக இருந்தது.

ராமர் கோவில்
ராமர் கோவில்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க மாநாடு இதுவரை எந்த கட்சியிலும் இல்லாத வகையில் 15 லட்சம் பேர் குவிந்தனர்.

திமுகவின் நீட்தேர்வு ரத்துக்கான கையெழுத்து வாங்கும் முயற்சி குறித்து..

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள், ஆட்சி பொறுப்பேற்றுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வதற்காகப் போடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை ஏராளமான கையெழுத்துக்கள் போட்டும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியவில்லை. திமுகவினர் பொதுமக்களிடம் பெற்ற 50 லட்சம் கையெழுத்து அட்டைகள் வீணாகக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக புகார் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு!

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து..

அதிமுக பொருத்தவரை தலைமை அறிவித்த குழுவினர் நாளைய தினம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியைத் தொடங்குவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைத்து, முறையாக அறிவிக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறித்து..

போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் போக்குவரத்துத் துறை சுணக்கம் கண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்
முதல்வர் மு.க ஸ்டாலின்

ராமர் கோயில் திறப்பு குறித்து..

ராமர் கோயில் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த, அவர், "ராமர் கோயில் கட்டுவதால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று கூறி விட முடியாது. அப்படி என்றால் தமிழகத்தில் அதிமுக பல கோயில்கள் கட்டி, ஏராளமான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தினோம். தேவாலயங்கள், மசூதிகளைப் புதுப்பிக்க அதிக நிதி ஒதுக்கியதும் அதிமுக ஆட்சிக்காலத்தில்தான்.

கோயில் கட்டினால் தான் மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றால் அனைவரும் கோவில் காட்டும் வேலைக்குச் சென்று விடுவார்கள். ராமர் கோயில் கட்டி விட்டதால் மக்கள் அனைவரும் அவர்களின்(பாஜக) பின்னால் சென்றுவிடுவார்கள், ஓட்டுப்போடுவார்கள் என்பது தவறான கருத்து” என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து..

”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு முறையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அவசர கதியில் பேருந்து நிலையத்தைத் திறந்ததால் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
சேலம் - தலைமை ஆசிரியர் அடித்ததால் கண்பார்வை இழந்த பள்ளி மாணவி; DSP அலுவலகத்தில் பெற்றோர் புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com