அதிமுக-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் : ராஜ்நாத் சிங்

அதிமுக-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் : ராஜ்நாத் சிங்
அதிமுக-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் : ராஜ்நாத் சிங்

அதிமுக-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சேலத்தில், பாஜக இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து தமிழகம் புறப்பட்ட ராஜ்நாத் சிங், தனிவிமானம் மூலம் சேலம் வந்தடைந்தார். பின்னர், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், தமிழக சட்டப்பேரவை மாதிரி வடிவத்தில் மாநாடு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, வெற்றிவேல்.வீரவேல். என்ற முழக்கத்துடன் ராஜ்நாத்சிங் தனது உரையை தொடங்கினார்.

அதிமுக-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் என்றும் நாட்டினை நிர்மானிப்பதற்காகவே பாஜக அரசியல் நடத்துகிறது எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அனைத்து மொழிகளுக்கு தாயாக உள்ள தமிழை நேசிப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். சீனாவுடன், பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு நமக்கு சாதகமான சூழல் நிலவி வரும் நிலையில், ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, நல்லவர்களா? கேட்டவர்களா? என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com