வனப்பகுதியை ஒட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் - ரிசார்ட்டுகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

வனப்பகுதியை ஒட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் - ரிசார்ட்டுகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
வனப்பகுதியை ஒட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் - ரிசார்ட்டுகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் ரிசார்ட்களுக்கு வனத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியப் பகுதிகளில் ஏராளமான கேளிக்கை விடுதிகள், ரிசார்டுகள் உள்ளன. பண்டிகை நாட்களில் இந்த விடுதிகளில் ஏராளமானோர்  குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். மாநகர் மாவட்ட பகுதிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் கோவையை நோக்கி படையெடுப்பர். இந்த விடுதிகளை ஒட்டிய பகுதிகளுக்கு வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடியும் தண்ணீர் தேடியும் வருவது வழக்கம். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இந்த விடுதிகள் தயாராகி வரும் சூழலில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் பல்வேறு வழிகாட்டு  நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
1. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.
2. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் பட்டாசுகள், வெடிகள் மற்றும் வானவேடிக்கைகள் வெடிக்கக்கூடாது.
3. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்த்து வாகன நெரிசல் ஏற்படுத்தி அருகிலுள்ள வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.
4. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக்கூடாது.
5. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் Camp Fire பயன்படுத்தவோ அல்லது வனப்பகுதிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
6. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வனச்சாலைகளில், வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனத்தில் வரக்கூடாது.
7. மது அருந்திவிட்டு, நள்ளிரவில் விருந்தினர்கள் வாகனம் ஓட்டி செல்வதை அவ்வழியாக செல்லும் வன விலங்களுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற வகையில் அதை கண்காணிப்பது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதி / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதியாளர்களின் பொறுப்பாகும்.
8. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதி / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிக்கு அருகில் யானை, மான், காட்டுமாடு போன்ற வன விலங்குகள் தென்பட்டால், சொந்த முயற்சியில் விரட்ட முயற்சிக்காமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது.
9. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதி / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிக்கு வனச்சாலையை பயன்படுத்துவதாக இருந்தால், இரவு 8 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தக்கூடாது.
10. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதி / ரிசார்ட்டுகள் / கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தினால் உண்டாகும் கழிவுகள் அனைத்தையும் வனப்பகுதிக்குள் கொட்டாமல் உரிய முறையில் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com