தமிழ்நாடு
மருத்துவக் கலந்தாய்வுக்கு பிறகே வேளாண் கலந்தாய்வு - வேளாண் பல்கலைக்கழகம்
மருத்துவக் கலந்தாய்வுக்கு பிறகே வேளாண் கலந்தாய்வு - வேளாண் பல்கலைக்கழகம்
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறகே வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளான் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில், 13 இளநிலை பட்டபடிப்புகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 820 இடங்கள் உள்ளன. வேளாண் பல்கலைக் கழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்ததாக, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பலர் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதால், வேளாண் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.