இன்றுடன் விடைபெறும் கத்திரி வெயில்... ஆனாலும் வெயில் விடாமல் சுட்டெரிக்குமாம்!

மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திரி வெயில் முடிந்தாலும் தமிழ்நாட்டின் சில இடங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com