சுடுகாட்டுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு: இறந்தவர் உடலை கொண்டு செல்லும்போது மோதல்

சுடுகாட்டுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு: இறந்தவர் உடலை கொண்டு செல்லும்போது மோதல்

சுடுகாட்டுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு: இறந்தவர் உடலை கொண்டு செல்லும்போது மோதல்
Published on

மாரண்டஅள்ளி அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் வழி ஆக்கிரமிப்பால், இறந்தவர் சடலம் கொண்டு செல்லும்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள தின்னகுட்லானஅள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டுப் பாதையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆனந்தன் என்ற தொழிலதிபர் 40 ஏக்கர் பரப்பில் மாந்தோப்பு நிலத்தை வாங்கி கம்பி வேலி அமைத்து வருகிறார். இதனால் நீண்ட காலமாக பொதுமக்கள் சுடுகாட்டுக்கு பயன்படுத்தும் சாலையை சேர்த்து முள்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தின்னகுட்லானஅள்ளி பகுதியைச் சார்ந்த சவுடப்பன்(85) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சடலத்தை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஆனந்தன் அவர்களை தடுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்களுக்கும், ஆனந்தன் என்பவருக்கு இடையே வாய்த்தகராறு மற்றும் மோதல்போக்கு ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் போலீசார், வட்டாட்சியர் ராஜா இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து வைத்து சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com