\
சட்டப்படிப்பு
சட்டப்படிப்புகோப்பு புகைப்படம்

3, 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கான வயது கட்டுப்பாடு நீக்கம்! இனி எந்த வயதினரும் படிக்கலாம்!

சட்டப்படிப்புகளான 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் முழுமையாக ரத்து செய்துள்ளது.
Published on: 
Summary

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 3 மற்றும் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கான வயது வரம்பை ரத்து செய்துள்ளது. இதனால் எந்த வயதினரும் சட்டத்துறையில் கல்வி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச உச்ச வயது வரம்பு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எந்த வயதினரும் சட்டப்படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்துவந்த சட்டக் கல்வி சேர்க்கைக்கான வயது வரம்பு விவகாரத்தில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கான அதிகபட்ச உச்ச வயது வரம்பை முழுமையாக ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டப்படிப்பு
சட்டப்படிப்புகோப்புப் புகைப்படம்

தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தபோது , நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வயதுக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் இந்தத் தகவலைப் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, சட்டப்படிப்புக்கான வயது வரம்பு விவகாரத்தை முடித்து வைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம், வயது வரம்பின்றி எந்தவொரு வயதினரும் சட்டக் கல்வியைப் பயிலும் வாய்ப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு
அதானி வழக்குகளை கைவிடும் அமெரிக்கா? பின்னணியில் ட்ரம்பின் வழக்கறிஞர்?
சட்டப்படிப்பு
சாதகமான தீர்ப்புக்கு ரூ.50 லட்சம்.. மூத்த வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு.. விலகிய நீதிபதி!