மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : கரியாப்பட்டினத்தில் போராட்டம்

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : கரியாப்பட்டினத்தில் போராட்டம்
மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : கரியாப்பட்டினத்தில் போராட்டம்

வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்துவதை கைவிடகோரி நான்காவது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்ததின் மூலம் நாடு முழுவதும் 22 நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளன. அதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. 

மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் கரியாப்பட்டினம் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மேலும் கரியாப்பட்டினம் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ள மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகையை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குழு சார்பில் கரியாப்பட்டினத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழு சார்பில் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் கரியாப்பட்டினத்தில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com