இன்றும் 4 பெண்கள் மாயம்: திருவள்ளூரில் அடுத்தடுத்த நிகழ்வால் பதற்றம்

இன்றும் 4 பெண்கள் மாயம்: திருவள்ளூரில் அடுத்தடுத்த நிகழ்வால் பதற்றம்

இன்றும் 4 பெண்கள் மாயம்: திருவள்ளூரில் அடுத்தடுத்த நிகழ்வால் பதற்றம்
Published on

திருவள்ளூரில் நேற்று 4 பெண்கள் காணாமல்போன நிலையில் இன்று மேலும் 4 பெண்கள் மாயமாகியுள்ளனர். இதனிடையே நேற்று காணாமல்போன பெண்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று காணாமல் போனவர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) என்ற பெண், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படது.

வெள்ளவேடு எல்லைக்குட்பட்ட ஜமீன் கொரட்டூர் பகுதியில் சித்தி வீட்டில் இருந்த சிவரஞ்சனி (16) என்ற‌ பெண் காணாமல் போனார். இதுதொடர்பாக வெள்ளவேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புல்லரம்பாக்கம் பகுதியில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி சென்ற கலைவாணி (20) என்ற பெண்ணை காணவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேலைக்கு சென்ற வர்ஷா (20) என்ற பெண் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதில் சிவரஞ்சனியையும், கலைவாணியையும் போலீசார் மீட்டெடுள்ளனர். சிவரஞ்சனியை கடத்தி சென்றது தொடர்பாக பிரதாப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு பகுதியில் செங்கல் சூளையில் கைது செய்யப்பட்ட பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளவேடு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் 4 பெண்கள் மாயமாகியுள்ளனர். செவ்வாய்பேட்டையை சேர்ந்த சாருலதா என்ற 19 வயது பெண் மாயமாகியுள்ளார். திருத்தணி சின்னகடம்பூர் மோட்டூரை சேர்ந்த தேவி என்ற 27 வயது பெண்ணும், திருத்தணியை அடுத்த தோமுரை சேர்ந்த சுபாஷினி என்ற 18 வயது பெண்ணும், திருவள்ளூர் திருப்பாத்தூரை அடுத்த 24 வயது சரண்யா என்ற பெண்ணும் மாயமாகியுள்ளனர். யாரேனும் அவர்களை கடத்திச் சென்றனரா..? என்ற கோணத்தில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே குரோம்பேட்டையில் நேற்று காணாமல்போன 4 பெண்களும் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com