தமிழ்நாடு
ஆட்சி மாறியும் கூவம் ஆற்று முகத்துவாரத்தில் மணல் திருட்டு தொடர்கிறது - கமல்ஹாசன்
ஆட்சி மாறியும் கூவம் ஆற்று முகத்துவாரத்தில் மணல் திருட்டு தொடர்கிறது - கமல்ஹாசன்
ஆட்சி மாறினாலும் சென்னை கூவம் ஆற்று முகத்துவாரத்தில் மணல் திருட்டு தொடர்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலேயே மணல் திருட்டு அரங்கேறுவதாகவும் இதனால் அரசுக்கு 11 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சாடியுள்ளார். இந்த மணல், கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல என சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன், கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

