பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நடிகை நமீதா அக்கட்சியில் இணைந்தார்
பா.ஜ.க செயல் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தார். அப்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இன்று காலை நடிகர் ராதாரவியும் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று மாலை நடிகை நமீதாவும் ஜேபி.நட்டா முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துகொண்டார். நமீதா இதற்கு முன்பாக அதிமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.