\
After MGR, Another Actor Becomes Chief Minister After Half a Century
Vijayweb

எம்ஜிஆருக்கு பின் ஒரு 'கதாநாயக முதல்வன்'.. அரைநூற்றாண்டுக்கு பின் ஒரு முதல்வர் நாயகன்!

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பதவியில் இருக்கும் தமிழக முதல்வர் கதாநாயகனாக நடித்த படம்
Published on

திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஜனநாயகன் படக்குழுவினருக்குத் தற்காலிக அதிருப்தியை ஏற்படுத்தினாலும், தாமதம் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை எழுதியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற ஒருவர், அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் நிகழ்ந்துள்ளது.

vijay
vijayweb

முதல்வர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், தணிக்கைக் குழு தாமதம் மற்றும் சட்டப் போராட்டங்கள் போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, தற்போது 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக 1977இல் எம்.ஜி.ஆர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவரது 'மீனவ நண்பன்' மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' ஆகிய படங்கள் வெளியாகின.

அதன்பின் 1992-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'நீங்க நல்லா இருக்கணும்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். எனினும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராக இருக்கும்போதே கதாநாயகனாக ஒருவரின் திரைப்படம் திரைக்கு வருவது 49 ஆண்டுகள் கழித்து விஜய் மூலமாகவே மீண்டும் சாத்தியமாகியுள்ளது.

After MGR, Another Actor Becomes Chief Minister After Half a Century
'நாளைய தீர்ப்பு' முதல் 'ஜனநாயகன்' வரை.. காதல் நாயகன் டூ மாஸ் ஹீரோ.. விஜயின் சகாப்தம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com