\
Aadhav Arjuna
Aadhav Arjunaweb

'கரூருக்கு அப்புறம் தவெகவின் பரம எதிரி திமுகதான்..' - ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

கரூருக்கு அப்புறம் தவெகவின் பரம எதிரி திமுகதான் என்றும், கரூர் கூட்ட நெரிசல் சதி, காவல் துறை துஷ்பிரயோகம் போன்றவற்றை செய்தது திமுகதான் என ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on
Summary

2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரிவால் பல எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். மாமல்லபுரத்தில் நடந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக தான் கரூருக்கு அப்புறம் தவெகவின் பரம எதிரி என குற்றம்சாட்டி, காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமை, கரூர் கூட்ட நெரிசல் சதி, எம்எல்ஏக்களை வாங்க ரூ.50 கோடி பேரம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

செய்தியாளர் - M. மீரா

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு பின் அதிமுகவில் நிலவிய உட்கட்சிப் பூசல் காரணமாக எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய ஓர் அணியும் கே.பழனிசாமி தலைமையிலான ஓர் அணியும் என 2ஆக பிரிந்தது. இதனைத் தொடர்ந்து 6 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுவரை தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்திருக்கிறது.

CM Vijay & Vijayabaskar
CM Vijay & Vijayabaskarweb

4 அதிமுக எம் எல் ஏக்கள் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்ட நிலையில், இன்று (ஜூலை 2) அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை (108 இடங்கள்) கிடைத்தபோது, அதிமுகவிடம் ஆதரவு கேட்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் ஆதரவுக் கேட்டது.

tvk
tvk PT

இன்னொரு தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும். திமுகவும், அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக சேர்வதற்கு முன்னால் அதிமுகவின் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் தவெகவில் வந்து சேர்வார்கள் என எங்கள் தலைவர் அரசியல் வியூகம் வகுத்தார். தற்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் 90 சதவீதம் பேர் தவெக-வை நோக்கி வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்னதாக கடைசி 15 நாள் ஏன் தவெக தலைவர் பரப்புரைக்கு செல்லவில்லை என்பதற்கான காரணம் - சரியாக காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் எல்லா இடங்களுக்கும் செல்லமுடியவில்லை. காவல்துறையின் ஒத்துழைப்பு இருந்த இடத்திற்கு மட்டும்தான் பரப்புரைக்கு செல்ல முடிந்தது. காவல்துறை சப்போர்ட் இல்லாத இடங்களுக்கு செல்ல முடியவில்லை. திருப்பூரில் காவல்துறை சப்போர்ட் இல்லை, ஏனென்றால் கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி. இந்த கேவலமான அரசியலை செய்தது திமுக தான்.

MK Stalin
MK Stalin web

கரூர் மக்களின் கண்ணீரால்தான் நீங்கள் கொளத்தூரில் தோல்வியை சந்தித்தீர்கள். இந்த தவெக அதிமுக இணைப்புக்கு பின் உங்கள் குடும்பத்தில் கடைசி முதலமைச்சர் நீங்கள்தான் ஸ்டாலின் அவர்களே, இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் . கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு லண்டனில் போய் செட்டில் ஆகுங்கள். கரூருக்கு அப்புறம் தவெகவின் பரம எதிரி நீங்கள்தான் .

கரூரில் தவெக-விற்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது, அதை முடிக்காமல் விடமாட்டோம். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் திட்டமிட்ட திமுக-வின் சதி. காவல் துறையை வைத்து இந்தச் சூழலை அவர்கள் உருவாக்கினர். கரூரில் உள்ள ரவுடி கட்டுப்பாட்டில் இருந்து அந்த ஊரை மீட்க வேண்டும். தவெக எம்எல்ஏ-க்களை விலை கொடுத்து வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர் என்றார்.

Aadhav Arjuna
”இது வெறும் ட்ரெய்லர்தான்..” தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் பேச்சு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com