\
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!

"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!

"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
Published on

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் " அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படம் வெளிவந்த பிறகு ரஜினிகாந்த் அவர்களுடைய அரசியல் தர்பார் அரங்கேறும். அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு இனி இடமே கிடையாது. எனவே, அவர் அரசியலுக்கு வருகிறார், ஒவ்வொரு கட்டத்திலும் முறையாக அவர் எல்லாவற்றையும் அறிவிப்பார்" 

"எந்த நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குவது, எந்த இடத்தில் மாநாடு நடத்துவது, எப்போது மக்களை சந்திப்பது, தேர்தல் அறிக்கையை எந்த வடிவத்தில் மக்களுக்கு வழங்குவது, அந்த தேர்தல் அறிக்கையில் எதுவெல்லாம் சொல்லப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான சிந்தனைகளோடு ரஜினிகாந்த் திட்டமிட்டு அனைத்தையும் உருவாக்கியிருக்கிறார். உரிய நேரத்தில் ஊடகங்களை அழைத்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவார் " என்றார் தமிழருவி மணியன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com