சாத்தூர்: பாலத்தில் கார் மோதி விபத்து - மனைவி, இரண்டு குழந்தைகளை கண்முன்னே பறிகொடுத்த கணவர்!

சாத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு. கணவன் உள்ளிட்ட இருவர் படுகாயம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், மனைவியும் 2 குழந்தைகளும் உயிரிழக்க, கணவன் உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.

நெல்லை திசையன்விளை மன்னார்புரத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ராஜா, கோவையில் வேலை செய்து வருகிறார். தொடர் விடுமுறையையொட்டி குடும்பத்தோடு அவர் காரில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கிருந்து கோவை திரும்பும்போது, சாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தில் மோதியது. நிகழ்விடத்திலேயே ரிச்சர்ட் ராஜாவின் மகன் உயிரிழந்தார்.

கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரிச்சர்ட்டின் மனைவி இறந்தார். அவரது மகள் நெல்லை மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயமடைந்த ரிச்சர்டும் அவரது சகோதரரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய

நெடுஞ்சாலையிலுள்ள பழைய பாலத்தை விரிவாக்கம் செய்யாததால் இதுபோன்ற விபத்துகள் தொடர்வதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com