\
வேலைநிறுத்தம் முடிந்து கடலுக்குத் திரும்பிய மீனவர்கள்

வேலைநிறுத்தம் முடிந்து கடலுக்குத் திரும்பிய மீனவர்கள்

வேலைநிறுத்தம் முடிந்து கடலுக்குத் திரும்பிய மீனவர்கள்
Published on

மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் முடிந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்.

கடந்த 14ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மூன்று நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க சென்றனர்.

கடந்த 15 ஆம் தேதி கச்சதீவு அருகே நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர், இந்தியில் பேசக் கூறியதாகவும், இந்தி தெரியாத காரணத்தால் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டை இந்திய கடலோரக் காவல்படை முற்றிலும் மறுத்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com