எனது தங்கையுடன் அவரது 2 குழந்தைகளும் உள்ளனர்: சிக்கியவரின் உறவினர்!
காட்டுத்தீயில் தன் தங்கை தொடர்பாக எந்த தகவலும் தெரியவில்லை என வனப்பகுதியில் சிக்கியவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு
குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 12 பேர்
திருப்பூரில் இருந்து சென்றவர்கள் என்றும், 24 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. தீயில்
சிக்கிய 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 10பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக சிக்கியவரின் உறவினர் ஒருவர் பேசும் போது, “எங்களுக்கு எது தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதும்
புரியவில்லை. அவர்கள் எங்களிடம் இதுவரை எதுவும் சொல்லவில்லை. சென்றுள்ளது எனது தங்கை மட்டுமள்ள, அவருடன்
8 வயது மற்றும் 11 வயது குழந்தைகளும் சென்றுள்ளனர். இதுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும்
தெரியவில்லை” என்றார்.