பேரிடர் மீட்புப் பணியில் கலக்கும் அடையாறு காவல்துறையினர்!
தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் மாமல்லப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்கிறது என்பதால், வங்கக்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள நிவாரண பணிகளுக்காகவே 5 மீட்புக்குழுக்களை அமைத்துள்ளது அரசு. செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
நிவர் புயல் எதிரொலியால் கடந்த இரு நாட்களாக சென்னை முழுக்கவே பலத்த சூரைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமல் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் மகத்தான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அடையார் பகுதி மக்களுக்குத்தான் அதிக பாதிப்புகள் என்பதால் அடையார் காவல் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், அடையார் டிசிபி விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில், காவல்துறையினர் சாலைகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் படங்களை பகிர்ந்து பாரட்டியும் வருகிறார். அதில், சில
(ஈக்காட்டுத்தாங்கல் ஒலிம்பியா எதிரே உள்ள ஜவகர்லால் நேரு ரோட்டில் அதிக அளவு தேங்கிய மழை நீரை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்த கிண்டி AC சுப்புராயன் ஆய்வாளர் சந்துரு ஆகியோருடனான குழுவினர்)
(சாஸ்திரி நகர் முதல் அவென்யூ சாலையில் புயலினால் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தினை சாஸ்திரி நகர் ஆய்வாளர் திரு.பலவேஷம்& காவலர்கள், SAG குழு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட்டுவரும் புகைப்படங்கள்)
(திருவான்மியூர் பிள்ளையார் கோவில் தெரு சாலையில் முறிந்து விழுந்த மரங்களை தகவல் கிடைத்த உடன் விரைந்து அகற்றிய காவல் ஆய்வாளர் ராசுந்தரம் &சிறப்பு நடவடிக்கை குழு)