”விரைவில் அமலாக்கத் துறையிடம் சரணடைவார்” - செந்தில் பாலாஜி சகோதரர் குறித்து வெளியான தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் அமலாக்கத் துறையிடம் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் அமலாக்கத் துறையிடம் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 4 முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை. அதனால், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியது.

தனக்கு இதய நோய் இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து 4 வாரங்கள் விலக்களிக்க அசோக்குமார் கோரியிருந்தார். அதற்கு அமலாக்கத் துறை அளித்த அனுமதி ஓரிரு நாட்களில் நிறைவடையவுள்ளது.

அதனால், குற்றப்பத்திரிகை நகலைப் பெற்று, அதில் எந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளவுள்ளதாக அசோக்குமாரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அமலாக்கத் துறையிடம் அசோக்குமார் சரணடைவார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com