\
ஜன.27-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு - வழக்கறிஞர் தகவல்

ஜன.27-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு - வழக்கறிஞர் தகவல்

ஜன.27-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு - வழக்கறிஞர் தகவல்
Published on: 

வருகிற 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

1994-95ல் சசிகலா தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ரூ. 4 லட்சம் குறைத்து காட்டியதாக சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை  வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வழக்கறிஞர் வருகிற 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

சசிகலா விடுதலையாக இருப்பதால் வழக்கு குறித்து அவரிடமிருந்து விளக்கம்பெற்று மனுதாக்கல் செய்ய அவகாசம் தேவை எனவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். சசிகலா தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தையடுத்து அடுத்தகட்ட விசாரணையை பிப்.4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com