\
வானூர்தியில் அறிவிப்புகள் முடிந்தவரை தமிழில் வழங்க ஆலோசனை: மத்திய அமைச்சர்..!

வானூர்தியில் அறிவிப்புகள் முடிந்தவரை தமிழில் வழங்க ஆலோசனை: மத்திய அமைச்சர்..!

வானூர்தியில் அறிவிப்புகள் முடிந்தவரை தமிழில் வழங்க ஆலோசனை: மத்திய அமைச்சர்..!
Published on: 

அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வானூர்தியில் அறிவுப்புகளை முடிந்தவரை தமிழில் வழங்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் “தமிழ் நாடு அரசு பண்பாட்டு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே . பண்டியராஜன் இன்று என்னைச் சந்தித்து விமான அறிவிப்புகளை வானூர்தியில் தமிழிலும் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்கெனவே அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வானூர்தியில் அறிவுப்புகளை முடிந்தவரை தமிழில் வழங்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளதாக நான் அவருக்குத் தெரிவித்தேன்” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com