“விருது வழங்கும் முறைகூட பொன்.மாணிக்கவேலுக்கு தெரியவில்லை” - ஏடிஎஸ்பி விளக்கம்

“விருது வழங்கும் முறைகூட பொன்.மாணிக்கவேலுக்கு தெரியவில்லை” - ஏடிஎஸ்பி விளக்கம்

“விருது வழங்கும் முறைகூட பொன்.மாணிக்கவேலுக்கு தெரியவில்லை” - ஏடிஎஸ்பி விளக்கம்
Published on

தம் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் பொன்.மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என ஏடிஎஸ்பி இளங்கோ புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

பொன்.மாணிக்கவேல் மீது தான் கொடுத்த புகார்களை மனதில் வைத்து அவர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என ஏடிஎஸ்பி இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். சிறந்த அதிகாரி என தம்மை பிற அதிகாரிகள் பாராட்டியிருப்பதாகவும், விருது வழங்கும் முறைகூட தெரியாமல் பொன்.மாணிக்கவேல் இருக்கிறார் என்றும் ஏடிஎஸ்பி இளங்கோ விமர்சித்துள்ளார்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராமநாதபுரம் கடலோர காவல்படை ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு விருது வழங்கக்கூடாது என பொன்.மாணிக்கவேல் தலைமைச் செயலர்‌, உள்துறை செயலர், டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ஏடிஎஸ்பி இளங்கோ இந்தக் கருத்தை புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com