நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக இன்று நேர்காணல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக இன்று நேர்காணல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக இன்று நேர்காணல்
Published on

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் புதுவையில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இதுவரை 27 பேர் விருப்பமனு பெற்றுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், கே.ஆர்.பிரபாகரன், திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட 18 பேரும், விக்கிரவாண்டியில் போட்டியிட முன்னாள் எம்பி லட்சுமணன் உள்பட 9 பேரும் போட்டியிட விருப்ப மனு பெற்றனர். இன்று பிற்பகல் 3 மணி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து, விருப்பமனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது. இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com