\
தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு
Published on

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதனிடையே மசோதாவுக்கு மக்களவையில் 293 பேர்  ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் 82 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com