\
அதிமுக ராஜ்யசபா எம்.பி முகமது ஜான் மரணம்

அதிமுக ராஜ்யசபா எம்.பி முகமது ஜான் மரணம்

அதிமுக ராஜ்யசபா எம்.பி முகமது ஜான் மரணம்
Published on: 

அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

2011 தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான். சில மாதங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

அதற்குமுன்பே 1996, 2001 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதி எல்.எல்.ஏவாக தேர்வான இவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com