
ஆளுநர் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறுகிறார் என அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ஜனநாயகக் கடமையை ஆளுநர் நிறைவேற்றத் தவறியதாகக் கூறி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும் தமிழக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி அதிமுக எம்பி வேணுகோபால் மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக எம்பி கேகே வேணூகோபால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.