”கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் - பேரவையில் நடந்த காரசார விவாதம்!
நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ”கிட்னிக்கள் ஜாக்கிரதை” என்ற வாசகத்தைக் கொண்ட பேட்ஜ்களைக் அணிந்து கொண்டு அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆறு மாத இடைவெளிக்குப் பின் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையின் இரண்டாம் நாளான நேற்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டவிருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ -க்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு அதிமுகவினருக்கு ரத்த அழுத்தம் உள்ளதா என கிண்டல் செய்திருந்தார். தொடர்ந்து, நேற்று நடந்த கேள்வி நேரத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின் தவெக தலைவர் நேரம் தவறி பரப்புரையில் ஈடுபட்டதே விபத்துக் காரணம் எனத் தெரிவித்திருந்தார்
தொடர்ந்தும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அரசு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதயடுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவை வெளிநடப்பு செய்திருந்தனர். இந்நிலையில், இன்று நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “கிட்னிக்கள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ்களை அணிந்து வந்தனர். தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பதிலளித்துமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசும் போது, "கிட்னித் திருட்டு விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் சிறப்பு புலனாவுக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் மூலமே, இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பத்தப்பட்ட இரு மருத்துவமனைகளான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதார் மருத்துவமனைகளுக்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் உரிமம் ரத்து செய்ய்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து தவறு யார் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக சார்ப்பில் இந்த பிரச்சனை சார்பாக மேலும் கேள்வி எழுப்புவார்கள் என எதிபார்க்கபடுகிறது.