மார்ச் 15ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

மார்ச் 15ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
மார்ச் 15ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வரும் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த கூட்டத்தொடர் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் அதிமுகவின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் மார்ச் 15ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com