\
காரணம் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டோம்: அதிமுக எம்எல்ஏ சரவணன்

காரணம் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டோம்: அதிமுக எம்எல்ஏ சரவணன்

காரணம் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டோம்: அதிமுக எம்எல்ஏ சரவணன்
Published on

கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் காரணம் தெரியாமலேயே அடைத்து வைக்கப்பட்டோம் என மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சரவணன், ஆளுநரை சந்திப்பதற்காக அழைத்துச் செல்வதாகத்தான் கூறினார்கள். ஆனால், திடீரென்று கூவத்தூர் அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்தனர் என்றார். எதற்காக அங்கு தங்க வைக்கப்பட்டோம் என்ற காரணம் தெரியாமலேயே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சரவணன் தெரிவித்தார். கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகப் பேட்டி அளிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த சரவணன், ஒருசில எம்எல்ஏக்களின் கருத்துகள் மட்டுமே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதுவே அங்குள்ள அனைத்து எம்எல்ஏக்களின் கருத்தல்ல என்றும் சரவணன் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com