\
சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்

சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்

சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
Published on

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ். வயது 64. வழக்கம்போல இன்று அதிகாலை வீட்டில் தினசரி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

தற்போது கனகராஜ் உடல் சூலூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. எப்போது இறுதிச் சடங்கு நடைபெறும் என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை.அதிமுகவின் மிக மூத்த தலைவராக கருதப்படும் எம்எல்ஏ கனகராஜ் மறைவிற்கு, அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பதவியில் இருக்கும் அதிமுக எம்எல்ஏ ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் இந்த தொகுதிக்கும் 3 தொகுதியோடு சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com