\
அதிமுக எம்எல்ஏ-க்களின் டெல்லி பயணம் ரத்து

அதிமுக எம்எல்ஏ-க்களின் டெல்லி பயணம் ரத்து

அதிமுக எம்எல்ஏ-க்களின் டெல்லி பயணம் ரத்து
Published on

டெல்லி செல்லவிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் தனக்கான பலத்தை நிரூபிப்பேன் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். இதுவரை 5 அதிமுக எம்எல்ஏ-க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி செல்லவிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பயணம் சிறிது நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. எம்.எல்.ஏக்களுக்கு திடீரென தொலைபேசி அழைப்புகள் வந்ததால், பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com