அதிமுக கூட்டணி : எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்.!
அதிமுக கூட்டணியின் தொகுதிகள் ஒதுக்கீடு பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பின்னர் தொகுதிகள் ஒதுக்கீட்டை அறிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,
அதிமுக போட்டியிடும் தொகுதிகள் :
சேலம்
நாமக்கல்
கிருஷ்ணகிரி
ஈரொடு
கரூர்
திருப்பூர்
பொள்ளாச்சி
ஆரணி
திருவண்ணாமலை
சிதம்பரம் (தனி)
பெரம்பலூர்
மதுரை
நீலகிரி
நெல்லை
நாகை (தனி)
மயிலாடுதுறை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
சென்னை தெற்கு
தேனி
பாமக போட்டியிடும் தொகுதிகள் :
தருமபுரி
விழுப்புரம்
அரக்கோணம்
கடலூர்
மத்திய சென்னை
திண்டுக்கல்
திருபெரம்பதூர்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் :
கன்னியாகுமாரி
சிவகங்கை
கோயம்பத்தூர்
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் :
வடசென்னை
கள்ளகுறிச்சி
விருதுநகர்
திருச்சி
தமாக போட்டியிடும் தொகுதி :
தஞ்சை
புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதி :
தென்காசி
புதிய நீதி கட்சி போட்டியிடும் தொகுதி :
வேலூர்
என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி :
புதுச்சேரி
என்கின்ற அறிவிப்பை வெளியிட்டார்.