’அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசு’ ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்புக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வரவேற்பு

’அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசு’ ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்புக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வரவேற்பு
’அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசு’ ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்புக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வரவேற்பு

மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசு என அக்கட்சி வரவேற்றுள்ளது.

மருத்துவ படிப்புகளில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓபிசி சமூகத்தினருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொடுத்த வழக்கில், 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட தீர்ப்புக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் 3 மாதங்கள் என்ற காலெக்கடு விதிக்கப்பட்டிருப்பது தீர்ப்பின் பலன்கள் விரைவில்வர வகை செய்திருப்பதாகவும், இது அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசு எனவும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com