”ஆளுநர் கண்களைக் கட்டிக்கொண்டா கையெழுத்திடுவார்?” - ஜெயக்குமார் காட்டம்!

“பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது. பாஜகவுடனான தேர்தல் கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்File Photo
Published on

இரட்டைமலை சீனிவாசனின் 164 வது பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர், தீண்டாமை எதிர்ப்பை உலகத்துக்கு அறிய வைத்தவர், பட்டியலின மக்களை கிராம நிர்வாக அலுவலர்களாக கொண்டுவர பாடுபட்டவர் இரட்டைமலை சீனிவாசன்” என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. அதனால் அரை அமைச்சர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. விசாரணை சிறைக்கைதிக்கு எப்படி அமைச்சர் பதவியை கொடுக்கலாம்?

அதிமுக முன்னாள் அமைச்சர்களை கழக பணி செய்யவிடாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவசர கோலத்தில் அனுப்பினால் ஆளுநர் கண்ணை கட்டிக்கொண்டா கையெழுத்து போடுவார்? பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து யாருக்காகவும் பின்வாங்காது.

ஜெயக்குமார்
PT EXCLUSIVE | “ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல” - ஆதாரங்களை அடுக்கும் அமைச்சர் ரகுபதி

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீதான தீர்ப்பு குறித்து கேட்கிறீர்கள். கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அதிகமான அளவு தேர்தல் செலவு செய்து மகன் மட்டும் ஜெயித்தால் போதும் என ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்தார். பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதிகள் தோற்க வேண்டும் என நினைத்தார்.

Annamalai | DMK | BJP
Annamalai | DMK | BJPpt desk

கோவையில் டிஐஜி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விசாரணையில் இருக்கிறது. அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் மறைந்த தலைவரை விமர்சித்தார். நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம். இதையடுத்து தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார். பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com