“பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் அண்ணாமலை” - ஜெயக்குமார்

பா.ஜ.க வளர்ந்துவிட்டதாக ஒரு மாயத்தோற்றத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணமலை ஏற்படுத்தி வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயக்குமார் - அண்ணாமலை
ஜெயக்குமார் - அண்ணாமலைPT

செய்தியாளர்: வண்ணை ரமேஷ்குமார்

சென்னை குயப்பேட்டையில், திருவிக நகர் தொகுதி சார்பாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

ஜெயக்குமார்-அண்ணாமலை
ஜெயக்குமார்-அண்ணாமலைகோப்புப் படம்

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது.... “அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் நேரத்தில் அதுகுறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துவிட்டதை போன்ற மாயத்தோற்றத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார். பாஜக என்ன பல்டி அடித்தாலும் இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துவிட்டார். ஆளும் கட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதனால் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” என்றார்.

ஜெயக்குமார் - அண்ணாமலை
“டீ போடுவதற்கு கூட தகுதி வேண்டும்; உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த தகுதி இருக்கிறதா?” – அண்ணாமலை

தொடர்ந்து டாஸ்மாக் விலை உயர்வு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முன்பு மறைமுகமாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கினார்கள். அதற்காக பாலாஜி தற்பொழுது உள்ளே இருக்கிறார், இனி அதிகாரப்பூர்வமாக வசூலிக்க உள்ளார்கள். இந்த வருவாய் அரசு கருவூலத்துக்கு செல்கிறதா? அல்லது சொந்த கருவூலத்துக்கு செல்கிறதா? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்” என்றார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.ஜி.ஆர்- ஐ விமர்சித்தது குறித்த கேள்விக்கு... “ஆ ராசாவின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆ ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் சிறைக்கு சென்றார். என்ன ஆனது என்பது தெரியவில்லை. நாங்கள் திருப்பிக் கொடுத்தால் தாங்க மாட்டார், கருணாநிதியின் குடும்ப கடனை அடைத்தவர் எம்.ஜி.ஆர்.

ஆ.ராசா
ஆ.ராசாfile

கருணாநிதி முதல்வராக காரணமானவர் எம்.ஜி.ஆர். அவர் இல்லை என்றால் கருணாநிதியே கிடையாது. இது ராசாவுக்கு தெரியுமா? நேத்து பெய்த மழையில் முளைத்த காளான் மிகப்பெரிய ஒரு தலைவரை தராதரமின்றி விமர்சனம் செய்யக்கூடாது. ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com