"அரசியல் என்பது பெருங்கடல்... விஜய் நீந்துவாரா... மூழ்கிப்போவாரா ?" ஜெயக்குமார்

நடிகர் விஜயின் அரசியல் பயணம் மூழ்குமா கரை சேருமா என்பதை மக்கள்தான் தீர்மானம் செய்யவேண்டும்
ஜெயக்குமார்
ஜெயக்குமார்PT

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு கட்சியின் கொள்கை, கொடி சின்னம் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்படும் எனவும், ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக்கொண்டு முழுமையாக சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் பணியை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளார் விஜய்.

விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்மிடையே பேசியபோது, “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நீங்க ஒரு பத்துபேர் சேர்ந்துகூட ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம். அதற்கான உரிமை ஜனநாயகத்தில் உள்ளது. ஆனால் அரசியல் என்பது ஒரு பெருங்கடல், இதில் நீந்தி கரை சேர்பவர்களும் உண்டு. இதில் மூழ்கி போகிறவர்களும் உண்டு. இதில் இவர் மூழ்குவாரா அல்லது நீந்தி கரை சேர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதேபோல் எங்கள் கட்சியானது சுமார் 30 வருடங்கள் நீடித்து நிற்கிறது. இதனால் இவர் கட்சி ஆரம்பிப்பதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது “ என்றார்.

முன்னதாக அதிமுகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com