தமிழ்நாடு
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி நீக்கம்
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி நீக்கம்
முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அதிமுவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து தமது குழுவினருடன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த ராமச்சந்திரன் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராமசந்திரன் நீக்கப்பட்டார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ராமச்சந்திரன், பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளதால் அவருக்கு ஆதரவு தெரிவித்தாக கூறினார்.