மதுரை அதிமுக மாநாட்டில் பெண்கள் அதிகம் பங்கேற்கவில்லையே?-முன்னாள் அமைச்சர் வளர்மதி கொடுத்த விளக்கம்

மதுரை அதிமுக பொன்விழா மாநாட்டில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ளவில்லை என்ற கருத்துகள் குறித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சொன்ன கருத்து குறித்து இங்கு பார்க்கலாம்.

அதிமுகவின் பொன்விழா மாநாடு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளும் வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில், 'டிஜிட்டல்' திரை, கலை நிகழ்ச்சிகள், உணவு வகைகள் எனப் பலவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலும் ஆண் தொண்டர்களே அதிகளவில் இடம்பெற்றிருந்ததாகவும், பெண் தொண்டர்கள் குறைந்த அளவிலேயே இடம்பெற்றதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து புதிய தலைமுறைக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி பிரத்யேக பேட்டி அளித்தார்.

இதுகுறித்து அவர், “பெண்கள் காலையில் அதிகளவில் இருந்தனர். மதியம் வெயில் அதிகரித்த நிலையில் பெண்கள் ஒதுங்கியிருக்கவே விரும்புவார்கள். ஆனால், காலையில் எடப்பாடியார் கொடியேற்றியபோது கிட்டத்தட்ட 5 ஆயிரம் பெண்கள் கும்பம் வைத்தப்படி நின்றனர்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com